நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்றும் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக அழகியபாண்டியபுரம், மானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நிலவி வந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், மாலை வேளையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு இதமான சூழ்நிலை உருவானது. அதனைத் தொடர்ந்து அழகியபாண்டியபுரம், மானூர் மற்றும் தேவர்குளம் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்தது இந்த மலையின் காரணமாக சாலையோரம் மழை நீர் ஓடியது மேலும் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.
செய்திகள்
அழகியபாண்டியபுரம், மானூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
🕒 17 செப்., 2026, 05:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரம், மானூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
